ஹொட்டல் அறையில் மொத்த குடும்பமும் தற்கொலை! கேக்கில் விஷம்... கடிதத்தில் இருந்த பகீர் தகவல்
தெலங்கானாவில் மொத்த குடும்பமும் ஹொட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சோகம்.
கடிதத்தில் எழுதியிருந்த அதிர்ச்சி தகவல்கள்.
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஹொட்டல் அறையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலங்கானாவின் நிசாமாபாத்தில் உள்ள ஹொட்டலுக்கு சில தினங்களுக்கு முன்னர் சூர்யபிரகாஷ் (37), அவர் மனைவி அக்ஷயா (35) மற்றும் தம்பதியின் பிள்ளைகளான பிரத்யுஷா (13), ஆத்வித் (7) வந்து தங்கினார்கள்.
அறையில் இருந்து அவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்த நிலையில் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள் பொலிசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது சூர்யபிரகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றவர் மூவரும் படுக்கையிலும் இறந்து கிடந்தனர்.
news18
அங்கிருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றினர். அதில், நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். என்னுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட்ட கிரண் குமார், வெங்கட், கனயம் சக்கரவர்த்தி, ஜனம் ஆகிய நால்வரும் லாபம் பிரிப்பதில் என்னுடன் சண்டை போட்டனர்.
என் வீட்டிற்கு வந்து எங்களை துன்புறுத்தி மோசமாக நடந்து கொண்டனர். அவர்கள் தான் எங்கள் மரணத்திற்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து பொலிசார் கூறுகையில், கேக்கில் குடும்பத்தாருக்கு விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு, சூர்யபிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர்.