விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் பிரபல நடிகை!
பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகை தமிழக வெற்றி கழகத்தில் இன்று விஜய் முன்னிலையில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணையும் நடிகை
பாஜகவின் கலை, பண்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாஜகவில் இருந்து விடை பெறுகிறேன்.
மும்மொழிக் கொள்கை திணிப்பு திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பு, தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக் கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை.
எனவே எனக்கென்று ஒரு இயக்கம், எனக்கென்று ஒரு கழகம், பெண்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை, இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி, பயணிக்கத் தொடங்கிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் 2-ம் ஆண்டு விழா நடைபெற்று வரும் நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதாக கூறியுள்ளார்.
அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழக வெற்றி கழகத்தின் இன்று விஜய் தலைமையில் இணைகிறேன். இனி தமிழக வெற்றி கழகமானது தமிழகத்தில் வெற்றி களமாக மாறவுள்ளது.
அதில், நானும் பங்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுத்து தவெகவில் இணைகிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |