தவெக ஆண்டு விழாவில் அசைவத்திற்கு NO.., 21 வகையான சைவ உணவுகளுடன் தயாராகும் மதிய விருந்து
தமிழக வெற்றி கழக இரண்டாம் ஆண்டு விழா நிகழ்வில் 21 வகையான சைவ உணவுகளுடன் மதிய விருந்து தயார் செய்யப்பட்டு வருகின்றது.
மதிய விருந்து
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவானது மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் இருக்கும் போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் நடைபெற இருக்க்கிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு 21 வகையான சைவ உணவு விருந்து தயாராகி வருகிறது.
காய்கறி பிரியாணி, சாதம், கதம்ப சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், கேரட் அல்வா, கேரள வகை பாயாசமான அடைபிரதமன் என 21 வகை உணவுகளுடன் மதிய விருந்து தயார் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் வெண்ணிலா ஐஸ்கிரீம் கொடுக்கப்படவுள்ளது.
வழக்கமாக தமிழக வெற்றி கழக நிகழ்ச்சியில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டும் வழங்கப்படும் நிலையில் இம்முறை சைவ உணவு மட்டுமே வழங்கப்படவுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |