ஏவுகணைகளால் உலகையே மிரட்டி வரும் வட கொரியாவுடன் கைகோர்த்த பிரபல நாடு: வெளியான முக்கிய தகவல்
ஈரான் மற்றும் வட கொரியா நீண்ட தூர ஏவுகணை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மீண்டும் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளதாக ரகசிய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான முக்கியமான பாகங்களை வட கொரியா ஈரானுக்கு அனுப்பி வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிக சமீபத்தியமாக கடந்த ஆண்டு வட கொரியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்ததாக தெரிவித்துள்ளது.
வட கொரியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்ததில் என்ன இருந்தன, இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஐ.நா ரகசிய அறிக்கையின்படி, செயற்கைக்கோள் சுமந்து செல்லும் ராக்கெட்டை உருவாக்க ஈரானின் Haj Ali Movahed ஆராய்ச்சி மையம் வட கொரிய ஏவுகணை நிபுணர்களின் ஆதரவையும் உதவியையும் பெற்றுள்ளதாம்.