தடுப்பூசி போடத் தவறினால் மாதம் $200 அபராதம் என வெளியான அதிரடி அறிவிப்பு! எங்கு தெரியுமா?
அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் $200 பிடித்தம் செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவலை தடுக்க தகுதியுள்ள ஒவ்வொரு நபர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பலரும் விரும்பி போய் தடுப்பூசி செலுத்திவரும் நிலையில், சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக, சில நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தாத தங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் $200 பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கொரோனா பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு தலா $40,000 செலவாகிறது என்பதால், இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
75% டெல்டா ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, ஜூலை நடுப்பகுதியில் 72% இருந்த நிலையில் தற்போது இது அதிகரித்துள்ளது.
மேலும் முடிந்தவரை 100%-ஐ நெருங்க வேண்டும் என நினைக்கிறோம் என கூறியுள்ளார்.