இனி இதற்கு தடை! பிரபல ஐரோப்பிய நாடு முக்கிய அறிவிப்பு
பிரபல ஐரோப்பிய நாடான இத்தாலியின் பிரபல சுற்றுலா தலமான வெனிஸில் கப்பல்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெனிஸ் லகூனில் பல அடுக்கு சொகுசு கப்பல்கள், மற்ற பெரிய கப்பல்கள் நுழைய தடை விதிப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாலை, அமைச்சர்கள் கூட்டத்தின் கூட்டத்தில், போக்குவரத்துத் துறையில் அரசாங்க ஆணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது எனசிஜி அரசாங்க அரண்மனையின் அலுவலகம் அறிவத்தது.
வெனிஸில் பெரிய கப்பல்கள் நுழைவதற்கான சிக்கலுக்கு தீர்வு தான் இதன் நோக்கம் என குறிப்பிடப்பட்டது.
பல ஆண்டுகளாக பல்வேறு பொது அமைப்புகள் மற்றும் முக்கிய கலாச்சார பிரமுகர்கள் இந்த கோரிககை வலியுறுத்தி வந்தனர்.
இது பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சரியான முடிவு என்று இத்தாலிய கலாச்சார அமைச்சர் Dario Franceschini தெரிவித்தார்.
அத்தகைய முடிவை யுனெஸ்கோ வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
