ரஷ்யாவின் தடுப்பூசியை தயாரிக்கவுள்ள பிரபல ஐரோப்பிய நாடு!
ரஷ்யாவின் Sputnik V கொரோனா தடுப்பூசியை இத்தாலி தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இத்தாலியில் 10 மில்லியன் டோஸ் Sputnik V கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தத்தில் ரஷ்யா ஒப்பந்தம் செய்ட்டுள்ளதாக இத்தாலிய-ரஷ்ய வர்த்தக சபை அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனத்தின் இத்தாலிய துணை நிறுவனமான Adienne Srl ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் கையெழுத்திட்டுள்ளது.
ஐரோப்பியாவிலேயே முதல் நாடாக இத்தாலி இது போன்ற முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இது ஒரு வரலாற்று ஒப்பந்தமாக பார்க்கப்படுவதாகவும் இத்தாலி-ரஷ்யா வர்த்தக சபையின் தலைவர் Vincenzo Trani கூறினார்.
மற்ற இத்தாலிய நிறுவனங்களும் விரைவில் ரஷ்ய தடுப்பூசியை தயாரிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும், ரஷ்ய அதிகாரிகள் ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற 20 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய பணியாற்றி வருகின்றனர் என்று இத்தாலிய-ரஷ்ய வர்த்தக சபை கூறியுள்ளது.
ஸ்பூட்னிக் V தடுப்பூசியை இந்தியா, தென் கொரியா, பிரேசில், சீனா, துருக்கி, பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகளில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் கூறியுள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி உலகம் முழுவதும் 45 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.