மெஸ்ஸியின் காரை சுற்றிவளைத்த ரசிகர்கள்., சொந்த ஊரில் திக்குமுக்காடிப்போன வீடியோ வைரல்
அர்ஜென்டினாவில் சொந்த ஊரில் பிறந்தநாள் விழாவிற்கு சென்றுகொண்டிருந்த லியோனல் மெஸ்ஸியின் காரை, ரசிகர்கள் சுற்றிவளைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை தனது மனைவியுடன் காருக்குள் அமர்ந்தபடி பார்த்து மெஸ்ஸி திக்குமுக்காடிப்போன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
கடவுளைப்போல பார்க்கின்றனர்
அர்ஜென்டினாவில் மெஸ்ஸியை விட பெரிய நட்சத்திரம், பிரபலம் என்று யாரும் இல்லை எனும் அளவிற்கு, அந்நாட்டு மக்கள் அவரை கிட்டத்தட்ட ஒரு கடவுளைப்போல பார்க்கின்றனர். அவர் எங்கு சென்றாலும் தெருக்களில், குறிப்பாக அவரது ஊரில் ஆயிரக்கணக்கில் கும்பல் குவிந்துவிடும்.
argentina.detailzero.com
அதிலும் அவர் இப்போது அர்ஜென்டினாவுக்கு 36 ஆண்டுகள் கழித்து ஒரு மறக்கமுடியாத உலகக்கோப்பையை வென்று கொடுத்தபிறகு, அவரது புகழ் இப்போது அதிக உயரத்தில் உள்ளது.
மெஸ்ஸியின் காரை சுற்றிவளைத்த ரசிகர்கள்
உலகக்கோப்பையை வென்ற பிறகு, சமீபத்தில் சொந்த ஊரான ரொசாரியோவில் (Rosario) மெஸ்ஸி தனது மருமகளின் 15-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார். காரில் மெஸ்ஸியுடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர்.
அப்போது, லியோனல் மெஸ்ஸியின் வாகனத்தின் முன் மக்கள் கடலென திரண்டனர். அவரது பெயரைச் சொல்லிக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்த அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
El que anda tranquilo por Rosario es Lionel Messi ?
— TNT Sports Argentina (@TNTSportsAR) December 28, 2022
NUESTRO CAMPEÓN DEL MUNDO ???? pic.twitter.com/jJuC2ToeZ1
கத்தார் 2022 FIFA உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் தலைநகர் ப்யூனஸ் அயர்ஸில் ஏற்பாடு செய்யப்பட ஒரு திறந்த பேருந்து அணிவகுப்பு, பெரும் கூட்டத்தின் காரணமாக கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் மெஸ்ஸி மற்றும் சக வீரர்கள் அனைவரும் பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.