மகனை இழந்த சோகம் - ரூ.6 கோடி காரை புதைத்த தந்தை
மகனை இழந்த சோகத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள காரை தந்தை புதைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரூ.6 கோடி காரை புதைத்த தந்தை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான வாழ்க்கையை அமைத்து கொடுக்க தங்கள் வாழ்க்கையை அர்பணிக்கிறார்கள். ஆனால், பிள்ளைகளின் இறப்பை எந்த பெற்றோராலும் தாங்கிக்கொள்ள முடியாது.

அதே போல், மாஸ்கோவில் பெற்றோர் ஒருவர் தனது மகனுக்காக ரூ.6 கோடி மதிப்புள்ள BMW சொகுசு கார் ஒன்றை பிறந்தநாளுக்கு பரிசாக அளித்துள்ளார்.
மகன் புதிய காரில் பெற்றோரை அழைத்து சென்று உற்சாகப்படுத்தியுள்ளான். ஆனால், கார் வாங்கிய சில நாட்களிலே மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மகனை இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாத தந்தைக்கு வீட்டில் இருந்த காரை பார்க்கும் போதெல்லாம் மீண்டும் மகனின் நினைவு வந்துள்ளது.
மகனே இல்லை இனி இந்த கார் எதற்கு என முடிவெடுத்த தந்தை, மகன் புதைக்கப்பட்ட கல்லறை அருகே பெரிய குழியை தோண்டி ரூ.6 கோடி மதிப்புள்ள BMW காரை உள்ளே இறங்கியுள்ளார்.
காரை வேறு யாரும் திருடிவிட முடியாதபடி காரின் மேல் காங்கிரீட் கலவையை ஊற்றி, கார் சாவியை அதில் எறிந்து காரை மூடியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |