மனைவியை பழிவாங்க 6 வயது மகளை கொன்ற கணவன்
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மனைவியுடனான தகராறினால், தனது மகளுக்கு விஷம் கொடுத்து நபர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் மனைவி தகராறு
மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டம் சாகாட் கிராமத்தைச் சேர்ந்தவர் நபர் ஒருவர், தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் அவரது மனைவி தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். குறித்த நபர் அங்கே சென்று மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
Representational
சாப்பாட்டில் விஷம் கலந்த தந்தை
ஆனால் அவனது மனைவி வர மறுத்துள்ளார். அப்போது யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் விஷத்தை கலந்து தனது 6 வயது மகளுக்கு அந்நபர் ஊட்டியுள்ளார். அதனை சாப்பிட்டதும் அச்சிறுமி வாந்தி எடுத்துள்ளார். இதனைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் இரண்டாவது மகளுக்கும் குறித்த நபர் சாப்பாடு ஊட்ட செல்லும்போது, உறவினர்கள் அதனை தடுத்துள்ளனர். எனினும் அவரும் சாப்பிட்டதால் தந்தை, மகள் இருவரும் சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளனர்.
Representational image
இதனையடுத்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அங்கு குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.