மகனுக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட தந்தை! பணம் கொடுத்து உதவிய இர்ஃபான்
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்ட தந்தைக்கு யூடியூபர் இர்ஃபான் உதவி செய்துள்ளார்.
போட்டியில் தந்தை
கோயம்புத்தூர் ரயில்நிலையம் முன்பு ரயில் பெட்டி வடிவத்தில் ஹொட்டல் ஒன்றை கேரளாவை சேர்ந்த செம்மனூர் நகைக்கடை உரிமையாளர் பாபி செம்மனூர் என்பவர் நிறுவியுள்ளார்.
இவர் தனது ஹொட்டலை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டியை அறிவித்தார்.
இந்த போட்டியில் அரை மணி நேரத்தில் ஆறு பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்று பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் கோவையைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கணேச மூர்த்தி என்பவர் கலந்து கொண்டார். அவர் தனது மகனின் மருத்துவ செலவிற்காக போட்டியில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எனது மகனுக்காக இந்த போட்டியில் கலந்து கொண்டேன். 15 வயதுடைய என் மகனுக்கு ஆட்டிசம் பாதித்துள்ளது. அவனை பள்ளியில் சேர்க்க ரூ.19 ஆயிரம் தேவைப்படுகிறது. கை கால் நன்றாக இருக்கிறது.
அவனுக்கான வேலையை அவனால் செய்ய முடியாது. நானும் எனது மனைவியும் மகனை கவனித்து கொள்கிறோம்" என்று கூறினார்.
இவர் போட்டியின் முடிவில் 4 பிரியாணி சாப்பிட்டு 2ம் இடம் பிடித்ததால் ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. இர்ஃபான் பண உதவி: இந்நிலையில், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக பிரியாணி போட்டியில் கலந்துகொண்ட கணேசமூர்த்தியின் குடும்பத்தினருக்கு யூடியூபர் இர்பான் நிதியுதவி செய்துள்ளார்.
சமூக வலைதளம் மூலமாக சக யூடியூபர்கள் மற்றும் இர்பான் இணைந்து திரட்டிய 1,05,000 ரூபாய் நிதியுதவியை குழந்தையின் மருத்துவ செலவுக்கு கொடுத்து உதவினர்.
அதாவது, புட் இன்பர்மேஷசன் சூர்யா 10 ஆயிரமும், பெப்பா ஃபுட்டி கணேஷ் 5 ஆயிரமும், இப்ரிஷ் 5 ஆயிரமும், இன்னைக்கு என்ன சமையல் சுனிதா 10 ஆயிரமும், டேன் ஜேஆர் விலாக்ஸ் சேனலின் டேன் ஜேஆர் 25 ஆயிரமும், இர்பான் 50 ஆயிரமும் என மொத்தமாக பணத்தை கொடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |