குழந்தையை விட லக்கேஜ் முக்கியமா? விமான விபத்தில் தந்தையின் செயலுக்கு கண்டனம்
விமானத்தில் தீ பற்றிய போது, குழந்தையை விட லக்கேஜூக்கு முக்கியத்துவம் கொடுத்த பயணி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அமெரிக்க விமானத்தில் தீ
அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை அமெரிக்கன் எர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் விமானம், மியாமிக்கு செல்ல இருந்தது.
விமானத்தில், 173 பயணிகள் உட்பட 179 பேர் இருந்த நிலையில், ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட தயாராக இருந்த போது, சக்கரத்தில் தீப்பற்றிக் கொண்டது.
பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு, மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பயணி மட்டும் சிறிய காயமடைந்ததால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விமானம் புறப்படும் போது லேண்டிங் கியர் செயலிழந்து தீ பற்றிக் கொண்டதாகவும், இதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தந்தையின் செயலுக்கு கண்டனம்
பயணிகள் அவசர வெளியேறும் வழியாக, கீழே சரியும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
🚨#UPDATE: Please don’t be like this father focus on your child instead of your luggage. You can’t safely manage both, and it only leads to accidents, like the one that just happened putting others at risk too pic.twitter.com/8CgeGFSD0K
— R A W S A L E R T S (@rawsalerts) July 26, 2025
இதில், பயணி ஒருவர் ஒரு கையில் தன்னுடைய உடமைகள் அடங்கிய சூட்கேசை பாதுகாப்பாக பிடித்துக்கொண்டு, மற்றொரு புறம் குழந்தையை அணைத்தபடி சரிந்து கொண்டே வெளியேறுகிறார்.
கீழே சறுக்கிய பிறகு எழுந்து நிற்க முயன்றபோது, சாமான்களின் எடை மற்றும் வேகம் காரணமாக அவர் கீழே விழுந்தார். இதில் அவர் அந்த குழந்தையின் மீது விழுந்தது போல் தெரிகிறது.
இந்த தந்தையின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவசர நேரத்தில் வெளியேறும் போது, குழந்தையை விட லக்கேஜ்க்கு முக்கியத்துவம் தர வேண்டாம். இவரை போல் எந்த தந்தையும் இருக்க கூடாது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |