கொழும்பு போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வி: பாகிஸ்தான் கேப்டன் கூறிய காரணம்
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வியடைந்தது.
பாகிஸ்தான் படுதோல்வி
கொழும்பில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 247 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் 159 ஓட்டங்களுக்கு சுருண்டதால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின்னர் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா (Fatima Sana),
"பவர்ப்ளேயில் நாங்கள் நிறைய ஓட்டங்கள் கொடுத்தோம். death ஓவர்களிலும் சில கூடுதல் ஓட்டங்களை இழந்தோம். நான் பந்துவீசும்போது அது சீமிங் செய்வதுபோல் இருந்தது. டேனி (டயானா பெய்க்) சீம் அல்லது ஸ்விங் குறித்து கொஞ்சம் குழப்பமாக இருந்தார்.
நான் அவளிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தேன். அடுத்த போட்டியில் அவள் நன்றாக இருப்பாள் என்று நினைக்கிறேன். நாங்கள் அவர்களை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தால், அது எங்களுக்கு ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும்.
இன்றைய (நேற்று) துடுப்பாட்ட வரிசை நன்றாக இருந்தது என்று நான் இன்னும் நம்புகிறேன். ஏனென்றால் அவர்கள் முதல் 5 இடங்களில் முழுமையான துடுப்பாட்ட வீரர்கள். அவர்கள் முன்னேற வேண்டும்.
துடுப்பாட்டத்தில் நீண்ட பார்ட்னர்ஷிப்கள் தேவை என்பதால், அதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிலைமைகளை மதிப்பிட்டு அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |