$25,000 வெகுமதியை அறிவித்த FBI: அமெரிக்காவில் சொந்த மகனை கொன்ற தாய் வலைவீச்சு
சொந்த மகனின் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பெண் குறித்த தகவல்களுக்கு பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) $25,000 வெகுமதியை அறிவித்துள்ளது.
$25,000 வெகுமதி
அமெரிக்காவில் தனது 6 வயது சொந்த மகனை கொன்ற சம்பவத்தில் தேடப்பட்டு வரும் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் (Cindy Rodriguez Singh) என்ற பெண்ணை கைது செய்து தண்டனை வழங்க உதவிகரமாக இருக்கும் தகவலுக்கு 25,000 அமெரிக்க டொலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) அறிவித்துள்ளது.
சிண்டி ரோட்ரிக்ஸ் சிங்கிற்கு இந்தியா மற்றும் மெக்சிகோவுடன் தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டு அக்டோபர் முதல் உயிருடன் பார்க்கப்படாத அவருடைய 6 வயது குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக ரோட்ரிக்ஸ் சிங் தேடப்பட்டு வருகிறார்.
கையும் களவுமாக சிக்கிய தாய்
2023ம் ஆண்டு மார்ச் 20 திகதி டெக்சாஸ் குடும்பம் மற்றும் பாதுகாப்பு சேவை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அதிகாரிகளிடம் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் தன்னுடைய மகன் அவருடைய உயிரியல் தந்தையுடன் மெக்சிகோவில் நவம்பர் 2022ம் ஆண்டு இருந்து இருப்பதாக பொய் தகவல்களை வழங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து மார்ச் 22ம் திகதி 2023 ஆண்டு தனது கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு செல்லும் விமானத்தில் ரோட்ரிக்ஸ் சிங் ஏறியுள்ளார்.
ஆனால் அங்கு காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் குழந்தை இல்லை என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.
இதையடுத்து 2023ம் ஆண்டு அக்டோபர் 31ம் திகதி சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் மீது டெக்சாஸ் பொலிஸார் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |