பயமற்ற உலகப்புகழ் ஸ்கைடைவர் பாராகிளைடிங்கில் மரணம்! சாகசத்தின்போது அதிர்ச்சி
இத்தாலியில் பிரபல ஸ்கைடைவர் பாராகிளைடிங்கின்போது நேர்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
உலகப்புகழ் பெற்ற ஸ்கைடைவர்
ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் (Felix Baumgartner) உலகப்புகழ் பெற்ற ஸ்கைடைவர் ஆவார்.
56 வயதான இவர், 2012ஆம் ஆண்டில் விண்வெளியின் விளிம்பில் இருந்து Freefall ஆக குதித்து, ஒலித்தடையை உடைத்து உலக சாதனை படைத்தார்.
இதன்மூலம் பயமற்ற ஃபெலிக்ஸ், டேர்டெவில் போன்ற அடைமொழிகளால் இவர் அழைக்கப்பட்டார்.
பாராகிளைடிங் சாகசம்
இந்த நிலையில் ஃபெலிக்ஸ் இத்தாலியில் பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டார். அட்ரியாடிக் கடற்கரையில் உள்ள கடலோர நகரமான போர்டோ சாண்ட்'எல்பிடியோ அருகே அவர் பாராகிளைடிங் செய்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கியதால் உயிரிழந்தார்.
இத்தாலிய செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, ஃபெலிக்ஸ் மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடரை இயக்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு உடல் ரீதியான அசௌகரியம் ஏற்பட்டதாகவும், படகின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் ஒரு உள்ளூர் ஹொட்டலின் நீச்சல் குளத்தில் மோதியதாகவும், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |