பிரபல சுற்றுலாத்தலத்தில் சீரியல் கில்லர்? பரபரப்பை உருவாக்கியுள்ள சம்பவங்கள்
பிரித்தானியர்களுக்கு விருப்பமான சுற்றுலாத்தலம் ஒன்றில் தொடர்ச்சியாக மூன்று இளம்பெண்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சீரியல் கில்லர் ஒருவர் நடமாடுவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பிரபல சுற்றுலாத்தலத்தில் சீரியல் கில்லர்?
மெக்சிகோவின் Puerto Vallarta நகரம், பிரித்தானியர்கள் விரும்பி சுற்றுலா செல்லும் ஒரு இடமாகும்.
இந்நிலையில், மே மாதம் 10ஆம் திகதி, சுற்றுலாத்தலம் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

சில நாட்களுக்குப் பின், நகரத்துக்கு வெளியே சாலையோரமாக ஒரு இளம்பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்து, எலிசபெத் மார்ட்டினெஸ் (27) என்னும் இளம்பெண்ணின் உடல் பாதையோரமாக வீசப்பட்டிருந்தது.
விடயம் என்னவென்றால், கொல்லப்பட்ட மூவருமே இளம்பெண்கள், மூன்று பேர் உடலிலுமே டாட்டூ வரையப்பட்டுள்ளது. அத்துடன், மூன்று பேருமே அரைகுறை ஆடையுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆக, யாரோ ஒரு சீரியல் கில்லர் அப்பகுதியில் நடமாடலாம் என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |