மாதம் 5 மில்லியன் டொலர் வருமானம்! அசத்தும் இளம்பெண்- எப்படி தெரியுமா?
செயற்கை நுண்ணறிவு முறையில் தயாரிக்கப்பட்ட விர்ச்சுவல் கேர்ள் பிரண்ட், என்ற AI தொழில் நுட்பம் மூலம் இளம்பெண் மாதம் 5 மில்லியன் டொலர் சம்பாதிக்கிறார்.
விர்ச்சுவல் கேர்ள் பிரண்ட்
தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகம் தொடர்ந்து முன்னேறி கொண்டே இருக்கிறது, அதற்கேற்றார் போல் மனிதர்களும் மாற வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
@snapchat
இந்நிலையில் சில மாதங்களாக தொழில்நுட்பத்தில் காலூன்றியின்றி இருக்கும், AI செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மனிதர்களின் மூளையை போல் செயல்படுகிறது.
இந்த வகையில் ஸ்னாப்சாட்டில் 1.8 மில்லியன் பேர் பின் தொடரும் கேரின் மேர்ஜோர் என்பவர், சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமானவராக உள்ளார். இண்டர் நெட் உலகில் இந்த இளம்பெண் செய்த சாதனை அனைவரும் இவரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
விர்ச்சுவல் உருவம்
கேரின் மார்ஜோரி ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு விர்ச்சுவல் உருவத்தை உருவாக்கியுள்ளார்.
@snapchat
அந்த விர்ச்சுவல் உருவத்தை வைத்து தற்போது நிஜ உலகத்தில் ஒரு பெண் இருப்பது போலவே உருவாக்கியதோடு, நாம் கேட்கும் அத்தனை கேள்விக்கும் காதலி போல் பதில் அளிக்கும் வல்லமை கொண்டதாக படைக்கப்பட்டுள்ளது.
@snapchat
இந்நிலையில் கேரின் விர்ச்சுவல் உருவத்தை அடிப்படையாக கொண்டு விர்ச்சுவல் கேர்ள் பிரண்ட் சேவையை துவங்கியுள்ளார். இந்த கேர்ள் பிரண்ட் சேவையை ஒரு நிமிடம் பயன்படுத்த ஒரு டொலர் கட்டணமாகும்.
கேரின் மார்ஜோரி தன்னுடைய விர்ச்சுவல் உருவத்திற்கு CarynAI என பெயர் வைத்துள்ளார். CarynAI குரல் அடிப்படையிலான சாட்போட் அதனோடு இவற்றுக்கு விர்ச்சுவல் உருவமும் உள்ளது.
5 மில்லியன் வருமானம்
இதனை தொடர்ந்து பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் CarynAI பேசுபவர்களோடு, நெருக்கமான அந்தரங்க உரையாடல்களை நடத்தவும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும், இச்சைகளை தூண்டும் வகையிலும் பேசும் வல்லமை பெற்றது.
@getty image
இது குறுகிய காலத்தில் இணைய வாடிக்கையாளர்கள் மத்தியில், பிரபலமாக கேரின் மார்ஜோரி பெரிய தொழில் வித்தகர் ஆகியுள்ளார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கேரின்” இது இளம் தலைமுறையினரின் தனிமையை குணப்படுத்த உதவும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கேரின் தற்போது இந்த விர்ச்சுவல் உருவம் மூலம் மாதத்திற்கு 5 மில்லியன் டொலர் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளார்.