முழங்கால் வரை முடி வளர வேண்டுமா? இந்த ஒரு எண்ணெய் போதும்
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முழங்கால் வரை முடி வளர்ச்சியை அதிகரிக்க வெந்தய எண்ணெய் ஒன்று போதும்.
தயாரிப்பது எப்படி?
முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் அரை கப் வெந்தயத்தை இடித்து போடவும்.
பின் இதில் மூழ்கின்ற அளவிற்கு தேங்காய் எண்ணெய் அல்லது உங்களுக்கு விருப்பமான எண்ணெயை ஊற்றவும்.
அடுத்து இதை 6 வாரங்கள் வெந்தயத்தை எண்ணெயில் ஊறவிட வேண்டும்.
இந்த பாட்டிலை ஒரு நாளைக்கு ஒரு முறை பாட்டிலை குலுக்கி வைக்க வேண்டும்.
ஆறு வாரங்களுக்குப் பிறகு வெந்தயத்தை பருத்தி துணி கொண்டு எண்ணெயை வடிகட்டி பயன்படுத்தவும்.
கிடைக்கும் நன்மைகள்
வெந்தய எண்ணெய் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி வலிமையான புதிய முடி வளரவும் செய்கிறது.
பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட வெந்தய எண்ணெய் பொடுகு பிரச்சனையை தடுக்கிறது.
இந்த எண்ணெய் பயன்படுத்துவதால், சேதமடைந்த முடியை ஆரோக்கியமாக மாற்றலாம். மேலும், முடிக்கு புதிய பொலிவை தருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |