கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு சமயலறையில் உள்ள இந்த ஒரு பொருள் போதும்
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், நீளமான கூந்தல் வளர்ச்சிக்கு வீட்டின் சமயலறையில் உள்ள வெந்தயம் ஒன்று போதும்.
கிடைக்கும் நன்மைகள்
வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் முடி தண்டுகளை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைக் குறைக்கவும், முடி உதிர்தலைத் தடுக்கவும் உதவுகின்றன.
வெந்தயத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சேதமடைந்த முடியை சரிசெய்ய உதவுகின்றது. இதனால் உங்கள் தலைமுடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வெந்தயவிதைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பொடுகுத் தொற்றை எதிர்த்துப் போராடவும், உச்சந்தலையில் அரிப்பைத் தணிக்கவும் உதவும்.
வெந்தயம் பயன்படுத்துவது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் வலுவான முடி வளர்ச்சியை ஆதரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |