கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்: மிதமானது முதல் கன மழை தொடர வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது.
கரையை கடந்த புயல்
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை நள்ளிரவில் மகாபலிபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடந்துள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.
Extreme rains for Villupuram dt and Pondy as Cyclone Fengal is going to get stuck near the coast
— Tamil Nadu Weatherman (@praddy06) November 30, 2024
-------------
Fengal is still holding out in Sea without crossing (refer previous post https://t.co/CWJisg4I2W Now this is dangerous with the cyclone being stuck there for hours and i… pic.twitter.com/PU4Yyv8Dn6
அத்துடன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய ஃபெஞ்சல் புயல் கிட்டத்தட்ட 7 மணி நேரங்களுக்கு பிறகு 11:30 மணியளவில் கரையை கடந்துள்ளது.
✍️ Fallen tree removed. 👷♀️👷♀️💪
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) November 30, 2024
📍 Shastri Nagar PS
28th Cross Street, Besant Nagar, Adyar district #ChennaiRains #chennaipolice #cyclone #Fengal pic.twitter.com/29c8biRxCQ
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |