திருமணத்திற்கு ஒரு மணிநேரம் முன்.,மணமகளை இரும்புக்கம்பியால் அடித்து கொன்ற மணமகன்! என்ன நடந்தது?
இந்திய மாநிலம் குஜராத்தில் திருமணத்திற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு, மணமகளை இரும்புக் கம்பியால் மணமகன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரும்புக் கம்பியால் தாக்கி
குஜராத் மாநிலம் பாவ்நகர் நகரில் சஜன் பரையா என்ற நபருக்கும், சோனி ஹிம்மத் ரத்தோட் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. 
திருமணத்திற்கு ஒரு மணிநேரம் முன்பு மணமகன் சாஜன் இரும்புக் கம்பியால் மணமகள் சோனியை தாக்கியுள்ளார். மேலும், அப்பெண்ணின் தலையை சுவரில் மோதியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த மணமகள் சோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோனியின் உடலைக் கைப்பற்றினர்.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தப்பியோடிய சாஜனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
புடவை வாக்குவாதம்
பின்னர் நடந்த விசாரணையில், திருமணம் செய்துகொள்ள இருந்த சாஜனும், சோனியும் தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து ஏற்பாடு நடந்துள்ளது. புடவை மற்றும் பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது என தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |