வருங்கால மனைவிக்காக பள்ளியை தீவைத்து எரித்த இளைஞர்; பொலிஸிடம் சொன்ன காரணம்!
வருங்கால மனைவி தேர்வில் தோல்வி அடைவார் என்பதால் அவர் படிக்கும் பள்ளியை தீ வைத்து எரித்துள்ளார்.
இந்த சம்பவம் எகிப்தில் கர்பியா மாகாணத்தில் நடந்துள்ளது.
எகிப்தில், கெய்ரோ அருகே தனது வருங்கால மனைவி படிக்கும் பள்ளிக்கு தீ வைத்த இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
21 வயதான சந்தேக நபர், பள்ளியில் படிக்கும் தனது வருங்கால மனைவி மீண்டும் அதே வகுப்பில் மற்றோரு ஆண்டு படிக்க நேரிடும், அதனால் தனது திருமணம் தள்ளிப்போகும் என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு செய்ததாக காவல்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Representative Image
அவரது வருங்கால மனைவி அதைச் செய்யச் சொன்னாரா என்பது தெரியவில்லை, ஆனால் அந்தப் பெண் தேர்வில் தோல்வியடைவார் என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு அவர் பள்ளியை எரித்துள்ளார். இந்த சம்பவம் எகிப்தில் கர்பியா மாகாணத்தில் நடந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, தீயில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை, ஆனால் ஆயிரக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டிடத்திற்கு தீ வைத்த பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இருப்பினும், பள்ளிக்கு அருகில் அவரைப் பார்த்த உள்ளூர்வாசிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.