உலக கோப்பை கால்பந்து: FIFA வெற்றியாளர்களின் முழு விவரப் பட்டியல்
கால்பந்து உலக கோப்பை போட்டிகள் தொடங்கியதில் இருந்து இதுவரை உள்ள வெற்றியாளர்கள் யார் யார், இரண்டாவது இடத்தை பதிவு செய்தது யார் யார் என்ற முழு அணிகள் விவரம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதல்
ஞாயிற்றுக்கிழமையான இன்று கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், கைலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியும் கத்தார் லுசைல் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை செய்யவுள்ளனர்.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி அர்ஜென்டினா அணியை தோற்கடித்து கோப்பை தக்க வைத்துக் கொள்ளவும், 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து கோப்பை வெல்லும் முதல் நாடு என்ற பெருமையை பெறுவதற்காகவும் பிரான்ஸ் அணி போராட உள்ளது.
Lionel Messi & Kylian mbappe-லியோனல் மெஸ்ஸி & கைலியன் எம்பாப்பே
அதே சமயம் கால்பந்து ஜாம்பவான் என்று உலக கால்பந்து ரசிகர்களால் போற்றப்படும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி-க்கு, இதுவே உலக கோப்பையில் இறுதி போட்டி என்பதால், கோப்பை வென்று அர்ஜென்டினா வெற்றி மகுடம் சூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை வெற்றியாளர்கள்
ஆண்டு உலக கோப்பை வெற்றியாளர்கள் இரண்டாம் வெற்றியாளர்
(2018) பிரான்ஸ் குரோஷியா
(2014) ஜெர்மனி அர்ஜென்டினா
(2010) ஸ்பெயின் நெதர்லாந்து
(2002) இத்தாலி பிரான்ஸ்
(2002) பிரேசில் ஜெர்மனி
(1998) பிரான்ஸ் பிரேசில்
FIFA WORLD CUP- FIFA உலகக் கோப்பை
(1994) பிரேசில் இத்தாலி
(1990) ஜெர்மனி அர்ஜென்டினா
(1986) அர்ஜென்டினா ஜெர்மனி
(1982) இத்தாலி ஜெர்மனி
(1978) அர்ஜென்டினா நெதர்லாந்து
(1974) ஜெர்மனி நெதர்லாந்து
(1970) பிரேசில் இத்தாலி
(1966) இங்கிலாந்து ஜெர்மனி
(1962) பிரேசில் செக்கியா
(1958) பிரேசில் ஸ்வீடன்
(1954) ஜெர்மனி ஹங்கேரி
(1950) உருகுவே பிரேசில்
(1938) இத்தாலி ஹங்கேரி
(1934) இத்தாலி செக்கியா
(1930) உருகுவே அர்ஜென்டினா