அர்ஜென்டினா கால்பந்து அணி மீது FIFA நடவடிக்கை: வீரரின் முறையற்ற சைகை குறித்து விசாரணை
கத்தார் கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் கோப்பையை வைத்து முறையற்ற சைகைகளை செய்த அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க FIFA கால்பந்து அமைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.
முறையற்ற சைகைகளை செய்த அர்ஜென்டினா
கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை 2022-ன் இறுதிப் போட்டியில், கைலியன் எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் உலகக்கோப்பையை கைப்பற்றியது.
'கோல்டன் பூட்' விருதை எம்பப்பே வென்றாலும், தொடர் நாயகனுக்கான 'கோல்டன் பால்' விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
Huevos ? ? #Dibu #Argentina #WorldCup #GoldenGlove pic.twitter.com/QIYlogUnBW
— NerDanger (@nerdangerous) December 18, 2022
அதேபோல், அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்க்கு (Emiliano Martinez) சிறந்த கோல்கேப்பருக்கான 'கோல்டன் கிளௌவ்' விருது வழங்கட்டது. இதன்முலம் கோல்டன் க்ளோவ் வென்ற முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை மார்டினெஸ் பெற்றார்.
ஆனால் எமிலியானோ மார்டினெஸ் தங்க கையுறை வாங்கியபின் இரண்டு கால்களுக்கு நடுவில் வைத்து மோசமான மற்றும் ஆபாசமான சைகையை ஒன்றை செய்தார். உடனடியாக, அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இணையத்தில் பலர் இதுபோன்ற செயலுக்கு மார்டினெஸைக் கண்டித்தனர்.
விசாரணை குழு அமைப்பு
பிரான்ஸ் கால்பந்து வீரர்கள் தன்னை கடுமையாக கேலி செய்ததால் தான் அவ்வாறு செய்ததாக அர்ஜெண்டினாவின் எமிலியானோ மார்டினெஸ் காரணத்தை விளக்கி இருந்தார்.
Getty Image
ஆனால் இந்த முறையற்ற சைகைகளை செய்ததற்காக அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையை மார்டினெஸ் எதிர்கொள்வாரா என்பது குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில் நடந்து முடிந்த கத்தார் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றவுடன் கோல்டன் க்ளோவ் விருதை வைத்து முறையற்ற சைகை செய்த நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினாவின் அணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க FIFA கால்பந்து அமைப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.