உலக கோப்பை கால்பந்து மோதல் இன்னும் சற்று நேரத்தில்...முதல் வரிசை வீரர்களின் பட்டியல் வெளியீடு
கத்தார் 2022ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்தில் அஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் இறுதி போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், இரு அணிகளின் முதல் வரிசை வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா-பிரான்ஸ்
கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.
இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், கைலியன் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் அணியும் கத்தார் லுசைல் மைதானத்தில் பலப்பரீட்சை செய்யவுள்ளனர்.
⚽️ ??? ??? ???? ?????! ⚽️#ARG ? #FRA
— SABC Sport (@SABC_Sport) December 18, 2022
? https://t.co/hibb8lxZ0n#SABCSportFootball | #Sisonke | #FIFAWorldCup pic.twitter.com/aSljcUoith
லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பிரான்ஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் அட்ரியன் ராபியோட் மீண்டும் பிரான்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் என்று உலக கால்பந்து ரசிகர்களால் போற்றப்படும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி-க்கு, இதுவே உலக கோப்பையில் இறுதி போட்டி என்பதால், கோப்பை வென்று அர்ஜென்டினா வெற்றி மகுடம் சூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா அணியை தோற்கடித்து கோப்பை தக்க வைத்துக் கொள்ளவும், 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து கோப்பை வெல்லும் முதல் நாடு என்ற பெருமையை பெறுவதற்காகவும் பிரான்ஸ் அணி போராட உள்ளது.
அணிகளின் முழு விவரம்
கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், முதல் வரிசை வீரர்களின் பட்டியலை இரு அணிகளும் வெளியிட்டு உள்ளனர்.
⚔️ ALINEACIONES | LINEUPS | STARTING XI
— GLOOBEFOOT (@gloobefoot) December 18, 2022
?? Argentina ? France ??
? FIFA World Cup 2022 - FINAL#FIFAWorldCup #Qatar2022 #ARG #FRA pic.twitter.com/5aenKzz9Mq
அர்ஜென்டினா அணி
எமிலியானோ மார்டினெஸ்; மோலினா, ரொமேரோ, ஓட்டமெண்டி, அகுனா; டி மரியா, டி பால், என்சோ பெர்னாண்டஸ், மேக் அலிஸ்டர்; லியோ மெஸ்ஸி. ஜூலியன் அல்வாரெஸ்.
பிரான்ஸ் அணி
லோரிஸ்; கவுண்டே, வரனே, உபமேகானோ, தியோ ஹெர்னாண்டஸ், அன்டோயின் கிரீஸ்மேன், டிசௌம்னி, ராபியோட், டெம்பேலே, ஜிரூட், கைலியன் எம்பாப்பே