"மிகவும் பெருமைப்படுகிறேன்" கத்தாரில் பிரான்ஸ் அணியின் வெற்றியை நேரில் பார்த்து கொண்டாடிய மக்ரோன்!
கத்தார் 2022 FIFA உலக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிரான்ஸ் அணி சென்றதில் மிகவும் பெருமைப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
கத்தாரில் இம்மானுவேல் மக்ரோன்
FIFA உலகக்கோப்பையில் மொராக்கோ அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று, பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை கத்தாரில் நேரில் பார்த்து கொண்டாடிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், 'மிகவும் பெருமைப்படுகிறேன்' என கூறியுள்ளார்.
தோஹாவில் அல் பேட் மைதானத்தில் நடந்த அரையிறுதி போட்டியின் போது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோவின் அருகில் அமர்ந்து ஆட்டத்தை கண்டுகளித்தார்.
Twitter/Getty Images
'மிகவும் பெருமைப்படுகிறேன்'
ஆட்டத்தின் முடிவுக்கு மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றபோது அவர் எழுந்து நின்று கைதட்டினார் மக்ரோன்.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்ரோன், “எனது நாட்டைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.
மேலும் "இந்த மகிழ்ச்சியை பிரெஞ்சுக்காரர்கள் அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என்று கூறினார்.
அதேசமயம், உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்ற முத்த ஆப்பிரிக்க நாடான மொராக்கோவுக்கு இம்மானுவல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.
"We must recognise that Qatar has organised this event very well!"
— beIN SPORTS (@beINSPORTS_EN) December 15, 2022
The President of France, Emmanuel Macron joined @equipedefrance in the dressing room after their win and spoke to the media about how Qatar has organised the @FIFAWorldCup. #FIFAWorldCup #Qatar2022 pic.twitter.com/1QJ7N0KJqX
இறுதிப் போட்டியில் மக்ரோன்
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கத்தாருக்கு வருவேன் என்று மக்ரோன் கூறினார்.
உலக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய மற்றும் தென்கிழக்கு ஆசிய தலைவர்களின் உச்சிமாநாட்டை மக்ரோன் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters