போர்ச்சுகல் அணிக்கு இறுதி நிமிடத்தில் காத்திருந்த அதிர்ச்சி: உலக கோப்பையில் கொரியா செய்த மாயாஜாலம்
கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரபல போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொரியா கால்பந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
போர்ச்சுகல்-கொரியா குடியரசு மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் குரூப் H பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் கொரிய குடியரசு அணிகள் Education City மைதானத்தில் மோதின.
ஆட்டத்தின் முதல் 5வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் வீரர் ரிக்கார்டோ ஹோர்டா கோல் அடித்து போர்ச்சுகல் அணியின் ஆதிக்கத்தை ஆட்டத்தில் வெளிப்படுத்தினார்.
fifa.com
சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேற கொரிய அணிக்கு இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியமானதாக இருந்த நிலையில், போர்ச்சுகல் அணி அடித்த கோலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கொரிய வீரர்கள் விறுவிறுப்புடன் செயல்பட்டனர்.
ஆட்டம் 27வது நிமிடத்தை அடைந்த போது போர்ச்சுகல் அணிக்கு கொரிய வீரர் கிம் யங்வான் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால் முதல் பாதி நிறைவடையும் போது இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
இறுதி நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி
போர்ச்சுகல் மற்றும் கொரியா குடியரசு-க்கு எதிரான ஆட்டத்தின் இரண்டாம் பாதி சமநிலையுடன் தொடங்கிய நிலையில், இந்த போட்டியின் வெற்றி கொரிய அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
??@Sonny7 searching for that goal#FIFAWorldCup | #KOR pic.twitter.com/TeJkivT7yD
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
ஆனால் ஆட்டம் 90 நிமிடங்களை தொட்ட போதும் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் தொடர்ந்ததால் கொரிய ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் போட்டியில் கூடுதலாக 3 நிமிடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக கொரிய வீரர் ஹ்வாங் ஹீச்சன் 90+1 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் இறுதி நிமிடத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியை கொரிய அணி வெற்றி பெற்றுள்ளது.
South Korea had to wait 10 minutes to celebrate, but it was worth it!?? pic.twitter.com/C67msxYgTU
— Ben Jacobs (@JacobsBen) December 2, 2022
சூப்பர் 16 சுற்று
குரூப் H பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணி சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
போர்ச்சுகல் அணியுடனான கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்ற கொரிய குடியரசு 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதுடன் சூப்பர் 16 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.
Group H, you were a fun one! #FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022