காயத்தால் அவதிப்படும் மெஸ்ஸி? இறுதிப்போட்டியில் விளையாடுவாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் அர்ஜென்டினா அணி நட்சத்திர வீரர் மெஸ்ஸி காயம் காரணமாக பயிற்சியை தவிர்த்துள்ளார். இந்த தகவல் வெளியாகி உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (18/12/2022) நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டியில்; லியோனல் மெஸ்ஸி களமிறங்குவதை காண உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
உலகக் கோப்பை வென்றுவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்ற கனவில் மெஸ்ஸி இருக்கிறார். இந்த தொடரில் 5 கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, 3 கோல்களை அடிக்க உதவியாகவும் இருந்து முத்திரை பதித்துள்ளார்.
britannica
இந்த நிலையில் குரோஷியா உடனான போட்டிக்கு பின் மெஸ்ஸி நகர முடியாமல் தனது தொடை தசை பகுதியை பிடித்துக் கொண்டதாக தி மிரர் செய்தி வெளியிட்டது.
ஆனால், அர்ஜென்டினா முகாமில் இருந்து மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டதாக உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதே நேரம் மெஸ்ஸி பயிற்சியிலும் கலந்து கொள்ளாவில்லை.
அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் கூறுகையில், அவர் காயமடையவில்லை. உடல் ரீதியாக அவர் மிகவும் வலிமையானவர் என மெஸ்ஸி காயத்தால் அவதிப்படுவதாக எழுந்த கேள்விகளை மறுத்துள்ளார்.
Reuters/Carl Recine