தரையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்! கமெராவில் சிக்கிய பதபதைக்க வைக்கும் காட்சி
லிபியாவில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான Benghazi-ல் இந்த விபத்து நடந்துள்ளது.
Benghazi நகரில் இடம்பெற்ற லிபியன் தேசிய இராணுவத்தின் அணிவகுப்பின் போது மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானி ஜமமால் இப்னு அமர் உயிரிழந்ததாக இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
பின்னர், இந்த விபத்தை லிபியன் தேசிய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் Khalifa al-Obeidi உறுதிப்படுத்தினார், மேலும் உயிரிழந்த விமானிக்கு இரங்கல் தெரிவத்தார்.
LNA MiG-21 crashing at today’s military parade in Benina, #Benghazi. pic.twitter.com/XOQ9rOeAAr
— Libya Monitoring ?? (@Libya_OSINT) May 29, 2021
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லிபியன் தேசிய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் அகமது அல்-மிஸ்மாரி, Benghazi-ல் உள்ள Benin-ன் இராணுவ தளத்தில் நடைபெறவிருக்கும் அணிவகுப்பு லிபியாவின் வரலாற்றில் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.