சூடானில் தொடர்ந்து 7 நாட்கள் போர் நிறுத்தம்: இரு ராணுவ தளபதிகளும் ஒப்புதல்
சூடான் நாட்டில் நடந்து வரும் ராணுவ மோதலில் 7 நாட்கள் போர் நிறுத்ததிற்கு இரு தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது.
சூடானில் உள்நாட்டு போர்
சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடையே பல வாரங்களாக போர் நடை பெற்று வருகிறது. இரு தரப்பினரும் நடத்திய துப்பாக்கி சூட்டில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பலரும் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டு மக்களை, சூடானிலிருந்து மீட்க ஐக்கிய நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு பின், 72 மணி நேர போர் நிறுத்ததிற்கு ஒப்புதல் அளித்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்களை ராணுவ உதவி மூலம் கப்பல், மற்றும் விமானத்தில் மீட்கப்பட்டனர். அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவியுடன் தங்களது தூதர்கள் மட்டும் குடிமக்களை மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.
7 நாட்கள் போர் நிறுத்தம்
இந்நிலையில் கடந்த வார வியாழனோடு போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெற்ற பின்பு, சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா அரசுகளின் முயற்சி மூலம் தொடர்ந்து 7 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தங்களுக்கு சூடானில் மோதலில் ஈடுபட்டுள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவம் போன்றவை ஒப்புதல் அளித்துள்ளன. இதன்படி மே 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை 7 நாட்கள் தொடர்ந்து போர் நிறுத்தம் இருக்கும் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சூடானின் அதிபர் சால்வா கீர் மயார்தீத் இரு தரப்பினர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளின் பெயர்களை குறிப்பிடும் படியும், குறிப்பிட்ட நாள் மட்டும் இடம் போன்றவற்றை தெரிவிக்கும் படியும் இருதரப்பினரையும் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.