பூமியில் சொர்க்கம்! இயற்கை எழில் கொஞ்சும் பிஜி தீவுகள் (Fiji Island)
பசிபிக் பெருங்கக்கடலின் தெற்கே பிஜி தீவானது அமைந்துள்ளது. இது 332 தீவுகளையும் அதுமட்டுமின்றி 500ற்கும் மேற்பட்ட தீவுத்திடல்களையும் கொண்டுள்ளது.
இதில் வெறும் 110 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகின்றனர். எரிமலை தொடர்கள், மலைக்காடுகள், அழகிய வெள்ளை மணற்கடற்கரைகள், பவளப்பாறை என இயற்கை எழில் கொஞ்சும் இதன் அழகு சுற்றுலா பயணிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் சொர்க்கப்பூமியாய் திகழ்கிறது.
பெரும்பான்மையான தீவுகள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எரிமலைச் சீற்றங்களினால் உருவானவையாகும்.
இத்தீவுகளில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் குடிபெயர்ந்திருக்காலம் என்று தொல்லியல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
18,274 கிலோமீட்டர் அளவை கொண்ட பிஜி தீவுகளில் 9 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர், அதில் 54% மக்கள் அந்நாட்டின் பூர்வீகர்களான மெலனீஷியர்களும் மீதமுள்ள 40% மக்கள் இந்தியர்கள் ஆவார்கள்.
காட்டுவளம், கனிமவளமானது நிறைந்துள்ளமையால் பிஜி நாடானது, பசிபிக் தீவு நாடுகளிலேயே பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக உள்ளது.
சர்க்கரை ஏற்றுமதியும், சுற்றுலாவும் தான் அந்நாட்டின் வெளிநாட்டு பணத்தை ஈட்டித்தரும் ஒன்றாகும்.
கவா என்கிற தாவரமானது ஒரு வகையான போதையை தரக்கூடியது. அதை நசுக்கி கூழாக்கி குடித்து வருகின்றனர் பிஜி மக்கள், அதுவே அந்நாட்டின் தேசிய பானமாக உள்ளது.
மெக்கே என்கிற நடன கலையானது எல்லா பிஜி நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி உலகில் எங்கும் காண இயலாத 800 வகை தாவரங்கள் பிஜி-யில் உள்ளது.
இதில் தாஜி மூஷியா என்கிறது அந்நாட்டின் தேசிய தாவரமாகும்.
மாமனுகா தீவுகள் (Mamanuca Islands)
20 குட்டி தீவுக்கூட்டங்களின் தொகுப்பே மாமனுகா தீவுகள், பிஜியில் பார்க்க விரும்பப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். அடர் நீலநிற கடல், வெள்ளை மணல், பவள முகடுகள் என கண்களுக்கு விருந்தளிக்கிறது. சர்வைவர் நிகழ்ச்சி இத்தீவுகளிலே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடி லெவு (Viti Levu)
பிஜி நாட்டின் மிகப்பெரிய தீவு இதுவாகும், மற்ற தீவுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர், இதன் பரப்பளவு 10,289 சதுர கிலோமீட்டர்கள். வெளிநாட்டு பயணிகளுக்கு ஏற்றவாறு ஆடம்பர ஓய்வு விடுதிகள், சொகுசு விடுதிகள் என இயற்கையின் அழகை ரசிக்க வழிவகை செய்கின்றது. இங்குள்ள கடைகளில் நினைவுப்பொருட்கள் உட்பட உங்களுக்கு பிடித்தவற்றை இங்கிருந்து அள்ளிச்செல்லலாம்.
வனுவா லியூ (Vanua Levu)
இது பிஜியின் இரண்டாவது பெரிய தீவாகும், சந்தனமரத் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபூரியாக திகழ்கிறது, இங்குள்ள மத்திய மலைத்தொடரான Nasorolevu தீவை இரண்டு பாகங்களாக பிரிக்கிறது. பிஜியின் நான்காவது மிக உயரமான மலைச்சிகரம் இதுவாகும். இங்கிருந்து சர்க்கரை, அரிசி, சிட்ரஸ் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுதவிர Kadavu, Yasawa Island, Denarau Island, Monuriki Island என எரிமலை சிகரங்கள், மழைக்காடுகள், தெளிவான நீரில் பல விளையாட்டுகள், நீரில் மூழ்கியும் உல்லாசமாக பொழுதை கழிக்கலாம்.