சீக்கிரம் அவுட்டாக்குப் பா! வீட்டுக்கு போகனும்: அவுஸ்திரேலியாவை மறைமுகமாக கிண்டல் செய்த விக்கெட் கீப்பர் வீடியோ
அவுஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில், வங்கதேச விக்கெட் கீப்பர் ஆட்டத்தை சீக்கிரம் முடிக்கும் படி பேசிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா அணி அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியா 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகவும் மோசமான தோல்வியை பதிவு செய்தது. ஏனெனில் முதலில் ஆடிய வங்கதேசம் அணி வெறும் 122 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.
@BCBtigers just destroyed @CricketAus!
— Junaeid Shafkat (@JunaeidShafkat1) August 9, 2021
Australia could manage only 62!?
Here Bangladesh wicket keeper Nurul hassan said to @Sah75official ❝Finish the game quickly,we don't go home for a long time (Due to covid protocol and biobubble).❞?#BANvsAUS #Bangladesh #Australia pic.twitter.com/w9riDPLYry
ஆனால் அவுஸ்திரேலியா அணி வெறும் 62 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது. இந்த தொடரை 4-1 என்று கைப்பற்றிய வங்கதேச அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய போட்டியின் போது, அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 58 ஓட்டங்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது, வங்கதேச அணியின் விக்கெட் கீப்பரான Nurul hassan, அப்போது பந்து வீசிய ஷகிப் அல் ஹசனிடம் சீக்கிரம் இந்த போட்டியை முடிங்க, வீட்டுக்கு போய் ரெம்ப நாள் ஆச்சு என்று கூறினார்.
ஏனெனில் இந்த போட்டி காரணமாக வங்கதேச வீரர்கள் கொரோனாவின் பயோ பபுளுக்குள் இருந்தனர்.
நேற்றோடு போட்டி முடிவதால், இந்த போட்டியை சீக்கிரம் முடித்தால், குடும்பத்தினரை சென்று பார்க்கலாம் என்பது போல் Nurul hassan கமெண்ட் செய்ய, இந்த வீடியோவை வங்கதேச ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.