விமானப்படை கொடியில் ஸ்வஸ்திக் சின்னத்தை நீக்க முடிவு செய்த ஐரோப்பிய நாடு
பின்லாந்து விமானப்படை தங்கள் கோடிகளில் உள்ள ஸ்வஸ்திக் சின்னங்களை நீக்க முடிவு செய்துள்ளது.
இது மேற்கத்திய நம்பு நாடுகளுடன் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
ஸ்வஸ்திக் சின்னம் நாஜி ஜேர்மனியுடன் (Nazi) தொடர்புடையதாக கருதப்படும் நிலையில், பின்லாந்து விமானப்படை இந்த சின்னத்தை 1918 முதல் பயன்படுத்தி வந்தது.
நாஜிக்கள் அதிகாரத்தில் வருவதற்கு முன்பே பின்லாந்து இந்த சின்னத்தை தங்கள் விமானப்படை சின்னமாக ஏற்றிருந்தது. இது ஒரு பண்டைய சின்னமாகவும், பல கலாச்சாரங்களில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் இருந்தது.
இருப்பினும் நாஜிக்கள் இந்த சின்னத்தை தங்கள் அடையாளமாக மாற்றியதிலிருந்து, அது உலகளவில் வெறுப்பின் அடையாளமாக மாறிவிட்டது.
இதனால் பின்லாந்து விமானப்படை கடந்த சில ஆண்டுகளாக ஸ்வஸ்திக் சின்னத்தை மெதுவாக நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் விமானப்படை கட்டுப்பட்டு பிரிவின் சின்னத்தில் இருந்து ஸ்வஸ்திக் நீக்கப்பட்டது. ஆனால், சில பிரிவுகளின் கோடிகளில் இது இன்னும் காணப்படுவதால், நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு கூட்டாளிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
NATO-வில் பின்லாந்து இணைந்த பின்னர் மேற்கத்திய நாடுகளுடன் நல்ல உறவுகளை பேணும் நோக்கத்தில் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |