பால்டிக் கடலில் சேதமடைந்த தொலைத்தொடர்பு கேபிள்கள்: 4 பேரை அடையாளம் கண்ட பின்லாந்து
பால்டிக் கடல் பிராந்தியத்தில் ஏற்படுத்தப்பட்ட கேபிள் சேதத்தில் தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்து இருப்பதாக பின்லாந்து காவல்துறை அறிவித்துள்ளது.
கடலடி கேபிள்கள் சேதம்
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதி பின்லாந்து மற்றும் எஸ்தோனியாவை இணைக்கும் கடலடி தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய பிறகு பால்டிக் கடலில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய உள்கட்டமைப்பு சேதங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிலையில் பின்லாந்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், பால்டிக் கடல் பிராந்தியத்தில் ஏற்படுத்தப்பட்ட கேபிள் சேதம் தொடர்பான விசாரணையில் 4 நபர்களை சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் கண்டு இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் 3 பேர் ஏற்கனவே பயண தடைகளை எதிர்கொண்டு இருப்பதாகவும், சந்தேக நபர்கள் எதிரான குற்றச்சாட்டுகளை முடிவு செய்வதற்காக தற்போது அரசு வழக்கறிஞர்களிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த கேபிள்கள் எலிசா ஓஜே(Elisa Oyj) மற்றும் அரிலியன் பின்லாந்து ஓகே(Arelion Finland Oy) ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |