முன்னெச்சரிக்கையாக பாதாள நகரத்தை உருவாக்கியுள்ள பின்லாந்து! வெளியான வீடியோ
பின்லாந்து ஒருவேளை படையெடுக்கப்பட்டால் அல்லது அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டால், மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்ககை நடவடிக்கையாக பாதாள நகரங்கள் கட்டப்பட்டுவருகிறது.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இணைய கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பின்லாந்து முன்னெச்சரிக்கையாக போர்கால நடவடிக்கைகாலை எடுத்துவருகிறது. அந்த வகையில் அணுசக்தி பேரழிவைத் தவிர்க்க பாதாள நகரத்தை (underground city) உருவாக்கியுள்ளது பின்லாந்து.
இந்நிலையில், அதனை உலகிற்கு தெரியப்படுத்தும் விதமாக அந்த பாதாள நகரத்தின் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: படுத்தப் படுக்கையாக புடின்! புற்றுநோயா? முன்னாள் பிரித்தானிய உளவாளி தகவல்
ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு நேட்டோ உறுப்பினராக முயற்சி செய்துவரும் பின்லாந்து, தனது நாட்டு மக்களைப் பாதுகாத்துக் கொள்ள எந் அளவிற்கும் செல்லும் என்று தெரிகிறது.
தகவல்களின்படி, பின்லாந்தில் உள்ள அதிகாரிகள் தலைநகர் ஹெல்சின்கியின் கீழ் ஒரு முழு நகரத்தையும் கட்டியுள்ளனர், அதில் விளையாட்டு மைதானம், ஹாக்கி மைதானம் மற்றும் நீச்சல் குளம் உள்ளது.
இதையும் படியுங்கள்: 36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில்., மகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த வீரத்தாய்!
Meanwhile in Finland - Finland’s underground city pic.twitter.com/6lYLxw1sY2
— beatfien (@beatfien2) April 13, 2022
நிலத்தடி நகரத்தில் 900,000 பேர் தங்கக்கூடிய 500-க்கும் மேற்பட்ட நிலத்தடி தங்குமிடங்கள் உள்ளன. இது ஹெல்சின்கி நகரத்தின் மொத்த மக்கள்தொகையை விட மூன்றில் ஒரு பங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
முழு நகரத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
பின்லாந்து ராணுவக் கூட்டணியால் பாதுகாக்கப்படாததால், நகர மக்களைப் பாதுகாக்க நிலத்தடி நகரம் உருவாக்கப்பட்டது. தங்குமிடங்களின் நுழைவு கதவுகள் தரைக்கு மேலே கவனமாக அமைந்துள்ளன.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டணியில் பின்லாந்து சேர முடிவெடுத்த பின்னர், அதன் போர்க்கால நடுநிலைப் பிம்பத்தை களைந்து ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினின் அச்சுறுத்தல்களை அடுத்து நிலத்தடி நகரத்தின் அறிக்கைகள் வந்துள்ளன.
இதையும் படியுங்கள்: வத்திக்கான் தேவாலயத்தில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!