ஐரோப்பிய நாடொன்றின் ஹொட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 6 பேர் பரிதாப பலி
வடக்கு செக் குடியரசில் ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
6 பேர் உடல் கருகி பலி
செக் குடியரசின் தலைநகர் பிராக்கில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹொட்டல் யு கோஜோட்டா.
இங்கு நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கியவர்களில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விசாரணை
இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், எரிவாயு ஹீட்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |