சிறைச்சாலையில் திடீர் தீ விபத்து! தெறித்து ஓடிய கைதிகள்.. 40 பேர் பலியான சோகம்
இந்தோனேசியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு 122க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை அறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
சிறையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேரம் போராடி ராட்சச தீயை அணைத்தனர். இந்த கொடூர விபத்தில் சிறை கைதிகள், காவலர்கள் உட்பட 41 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
40க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மின்கசிவால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.