ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து! அலறியடித்து வெளியேறிய பயணிகள்
திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் தீ விபத்து
திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலானது குஜராத் மாநிலத்தின் வால்சத் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.
அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே ரயிலின் ஜெனெரேட்டர் பெட்டியில் தீ பிடித்துள்ளது. ரயிலில் இருந்து தீ பரவுவதை பார்த்ததும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், ரயிலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று செயல்படுத்தப்பட்டன.
காரணம் என்ன?
இந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக, ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
அதுமட்டுமல்லாமல், ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகெலாகூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |