திடீரென தீப்பிடித்த ஹொட்டல்..தப்பிக்க முடியாமல் இருவர் பலியான சோகம்
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியானதுடன், 10 பேர் காயமடைந்தனர்.
இத்தாலிய உணவகம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இத்தாலிய உணவகமான Burro Canaglia Bar & Resto என்ற உணவகம், தலைநகர் மாட்ரிட்டில் அமைந்துள்ளது.
இந்த உணவகத்தில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அலறிய வாடிக்கையாளர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற முயற்சித்துள்ளனர்.
@Reuters
ஆனால், வெளியேறும் வழிக்கு அருகிலேயே தீப்பிடித்திருந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இருவர் பலி
இதில் இருவர் பரிதாபமாக பலியானதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் அவசர சேவை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பணியாளர் ஒருவர் இச்சம்பவம் குறித்து El Pais செய்தித்தாளிடம் கூறுகையில், ஒரு பாத்திரத்தில் உணவை சமைக்க எரியூட்டியபோது எதிர்ப்பாராத விதமாக தீப்பற்றியதாகவும், பின்னர் தீப்பிழம்புகள் கூரை மற்றும் சுவர்கள் மீது பரவியதாகவும் தெரிவித்தார்.