ஸ்பெயின் இரவு விடுதியில் பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி! மேலும் 8 பேர் மாயமனதால் அச்சம்..பரபரப்பு வீடியோ
ஸ்பெயினில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு விடுதி
தென் கிழக்கு ஸ்பெயினின் முர்சியாவின் அட்டாலயா பகுதியில் இரவு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்க போராடிய வீரர்களால், 4 மணிநேரம் கழித்து தான் கட்டிடத்திற்குள் நுழைய முடிந்தது.
எனினும், 4 பேரின் உடல்களை மீட்ட வீரர்கள் 40 நிமிடங்களுக்கு பின் இருவரைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து மேலும் ஒருவரைக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இறுதியில் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காணாமல் போனதாகவும் அவசர சேவை பிரிவு தெரிவித்தது. அத்துடன் 22 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் காயமடைந்தது தெரிய வந்துள்ளது.
8 பேர் மாயம்
இதற்கிடையில் காணாமல் போன 8 பேரும் இரவு விடுதியில் பிறந்தநாள் கொண்டாடும் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. தீயணைப்பு வீரரக்ள் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என நம்பப்படுவதால் அவர்களை தேடி வருகின்றனர்.
தற்போது வரை பரபரப்பாக இருக்கும் இந்த இரவு விடுதி தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை. நகர மேயர் ஜோஸ் பலேஸ்டா இந்த சோக சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |