வங்கதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து - விமான சேவை முடக்கம்
வங்கதேச தலைநகர் டக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வந்தது.
விமான நிலையத்தில் தீ விபத்து
இன்று மதியம் இந்த விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கும் சரக்கு முனையத்தில் திடீரென தீ பற்றியது.
உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இனைந்து தீயை கட்டுக்குள் கொண்டும் வர முயற்சித்தனர்.
இதன் காரணமாக அந்த சுற்றுவட்டார பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் காரணமாக விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. சென்னையில் இருந்து டக்கா செல்வதாக இருந்த இண்டிகோ விமானம் கொல்கத்தாவிற்கு திருப்பி விடப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |