ஐரோப்பாவின் மிகப்பெரிய தரவு சேமிப்பக நிறுவனத்தில் தீ: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அலுவலர்கள்
பிரான்ஸ் நகரமான Strasbourgஇல் அமைந்துள்ள OVHcloud என்னும் தரவு சேமிப்பகம் (cloud provider) ஐரோப்பாவிலேயே பெரியதாகும். ஆசியா பசிபிக் மற்றும் அமெரிக்க பிராந்தியத்திலும் அதன் சேவை பயன்படுத்தப்படுகிறது.
நேற்று நள்ளிரவுக்குப் பின், இன்று (புதன் கிழமை) அதிகாலை திடீரென அந்த அலுவலகத்தில் தீப்பற்றியது.
அந்த தீயை கட்டுப்படுத்த 100 தீயணைப்பு வீரர்கள் ஆறு மணி நேரம் போராடவேண்டியிருந்தது. ஐந்து தளங்கள் கொண்ட 500 சதுர அடி SBG2 தரவு மையம் முற்றிலும் நாசமாகிவிட்டது.
SBG1 மோசமாக பாதிக்கப்பட்டுள்ல நிலையில், SBG3 மற்றும் SBG4 தரவு மையங்களை தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றிவிட்டார்கள்.
#Strasbourg Un bâtiment de stockage de serveurs informatiques @OVHcloud_FR ravagé par un incendie #DNAinfos https://t.co/EuELb9Nux3 pic.twitter.com/MKlXDInhWP
— Antoine Bonin (@abonin_DNA) March 10, 2021
தீ விபத்தைத் தொடர்ந்து, இன்று தரவு மையங்கள் எதுவும் செயல்படாது என்று OVHcloud நிறுவனரான Octave Klaba தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின்போது, மூன்று பேர் அலுவலகத்தில் பணியிலிருந்துள்ளார்கள். என்றாலும், அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

