சீனாவில் ஜவுளி உற்பத்தி ஆலையில் தீ விபத்து: 8 பேர் வரை உயிரிழப்பு
Fire at Foshan Textile Facility in China, 8 Dead: சீனாவில் உள்ள ஜவுளி உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தி ஆலையில் தீ விபத்து
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஃபோஷன்(Foshan) நகரில் அமைந்துள்ள ஜவுளி உற்பத்தி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திங்கட்கிழமை காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்து இருப்பதாக உள்ளூர் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர கால மீட்பு படையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இதுவரை தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

தொழிற்சாலையில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய விசாரணை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.