ரஷ்யாவின் வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிப்பு விபத்து: வெளியான வீடியோ ஆதாரம்!
- பெல்கோரோட் வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிப்பு விபத்து
- தீயினை அணைக்க மீட்புக் குழுவினர் டிமோனோவோ பகுதிக்கு விரைந்துள்ளனர்
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கில் வைக்கப்பட்டு இருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பெல்கோரோட் (Belgorod) பகுதியின் டிமோனோவோ(Timonovo) கிராமப் பகுதியில் உள்ள வெடிமருந்து கிடங்கில் பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக வெளிவராத நிலையில், கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயிணை அணைக்க தீயணைப்பு குழு மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
The fire at the ammunition warehouse in Timonovo, Belgorod region is intensifying. pic.twitter.com/gSIniHm5ST
— ТРУХА⚡️English (@TpyxaNews) August 18, 2022
மேலும் இந்த விபத்தில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.
வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு விபத்திற்கு முன்னதாக, பெல்கோரோட் பகுதியில் உள்ள ஸ்டாரி ஓஸ்கோல் விமானநிலையத்தில் தீ மற்றும் பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பெல்கோரோட் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
How many smokers does the #Russian army have, @mfa_russia? This time someone tossed a cigarette butt in Belgorod Oblast, forcing the governor to evacuate ppl from the villages nearby. Need to be careful with these things. #UkraineRussiaWar pic.twitter.com/i5CnjFbl5n
— KyivPost (@KyivPost) August 18, 2022
கூடுதல் செய்திகளுக்கு: மேற்கு எல்லைக்கு நகர்த்தப்படும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்... ரஷ்யாவின் அடுத்த குறி என்ன?
ரஷ்யா மற்றும் அதன் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து வெடிப்பு விபத்துகள் நடைபெறுவதால் இவற்றில் உக்ரைனின் தலையீடு உள்ளனவா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.