மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 1000 வீடுகள் எரிந்து நாசம்
ஆசிய நாடான மலேசியாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1000 வீடுகள் எரிந்து சேதமடைந்ததாக தெரிய வந்துள்ளது.
தற்காலிக குடில்கள்
கம்புங் பஹாகியா என்ற இடத்தில் உள்ள கிராமத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நான்கு ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவை தீ சூழ்ந்துள்ளது. இதில் 1000 வீடுகள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
கடலோரத்தில் நீரின் மீது கட்டப்பட்ட தற்காலிக குடில்கள் என்பதால், கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடியுள்ளனர். ஒருவழியாக நண்பகலில் தீயணைப்பு நடவடிக்கை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை
Sandakan தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜிம்மி லகுங் இதுகுறித்து, "கடல் நீரைத் தவிர, தீயணைப்பு நடவடிக்கைகளில் ஒரு தொழிற்சாலைக்கு சொந்தமான டேங்கர் மற்றும் அழுத்தப்பட்ட நீர்க்குழாயில் இருந்தும் நீர் பயன்படுத்தப்பட்டது.
தீயை அணைக்க 1,000 அடி நீளமுள்ள நான்கு குழாய்களும், 12 நீர் பாய்ச்சிகளும் பயன்படுத்தப்பட்டன. Kinabatangan நிலையத்தைச் சேர்ந்த ஒரு தீயணைப்பு வாகனமும் இந்த நடவடிக்கைக்கு உதவியது. அது 400 அடி நீளமுள்ள இரண்டு குழாய்களையும், நான்கு நீர் பீய்ச்சிகளையும் பயன்படுத்தியது. எந்த உயிரிழப்பும் இதில் ஏற்படவில்லை" என அறிக்கையில் கூறினார்.
இதற்கிடையில், சுமார் 400க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |