பிரபல ஐரோப்பிய நாட்டில் பயங்கரம்! மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் பலி: வெளிவரும் பகீர் தகவல்
பிரபல ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ருமேனியாவின் துறைமுக நகரமான கான்ஸ்டன்டாவில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கான்ஸ்டன்டா மருத்துவமனையிலிருந்து அனைத்து நோயாளிகளும் வெளியேற்றப்பட்டனர் மற்றும் நள்ளிரவில் தீ அணைக்கப்பட்டது என்று ருமேனியாவின் அவசரகால சூழ்நிலை ஆய்வாளர் கூறினார்.
விபத்து தொடர்பான மேலதிக விவரங்கள் செய்தியாளர் சந்திப்பில் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் 113 நோயாளிகள் இருந்ததாகவும், அவர்களில் 10 பேர் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ருமேனியா கடந்த ஆண்டு இரண்டு பயங்கரமான மருத்துவமனை தீ விபத்துகளைச் சந்தித்துள்ளது.
Arde ATI Sp Boli Infecțioase Constanta pic.twitter.com/yMYy53DcVC
— Zattta (@zatttta1) October 1, 2021
கடந்த நவம்பரில், வடக்கு நகரான பியாட்ரா நியாம்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் இறந்தனர்.
ஜனவரியில் Bucharest’s Matei Bals மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் பலியாகினர்.