கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுடன் பிறந்த முதல் குழந்தை! எந்த நாட்டில் தெரியுமா?
பிரபல ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் முதல் முறையாக ஒரு குழந்தை கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுடன் பிறந்துள்ளது.
Ibiza தீவில் கடந்த வாரம் பிறந்த ஒரு குழந்தை ஸ்பெயினில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகளுடன் பிறந்த முதல் குழந்தையாக மாறியுள்ளது.
அந்த குழந்தை 9 மாத கருவாக இருந்தபோது, தாய்க்கு கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Mallorca-வில் உள்ள Son Espases மருத்துவமனையில், குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து ஒரு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அந்த குழந்தை கோவிட் -19க்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கியிருப்பதை உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோன அத்தடுப்பூசி வழங்கப்பட்ட ஒரு பெரியவர் எந்த அளவிற்கு ஆன்டிபாடிகளை உருவாக்குவார்களோ, அதற்கு சமமாக இந்த குழந்தையின் உடலில் உற்பத்தியாகியுள்ளது என Madrid மருத்துவமனை இயக்குநரகத்தின் துணை இயக்குநர் Manuel Grandal Martin கூறியுள்ளார்.
Bruno என பெயரிடப்பட்ட இந்த குழந்தை ஆய்வின் ஒரு அங்கம் தான் என்றும், மேலும் கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 88 கர்ப்பிணிப் பெண்களை இந்த ஆய்வு கண்காணிக்கிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுவதன் முலம், தாய்க்கும், தாயிடமிருந்து நஞ்சுக்கொடி மூலம் குழந்தைக்கும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை வழங்க முடியும் என பிற நிபுணர்கள் நம்புகின்றனர்.

