உதட்டு முத்தம் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது தெரியுமா? ஆய்வில் ருசிகர தகவல்
உதட்டுடன் உதடு இணைத்து கொடுக்கும் முத்தம் பிறந்து கிட்டத்தட்ட 2 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2 கோடி வருடத்திற்கு முன் பிறந்த உதட்டு முத்தம்
மனிதர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மையாக முத்தத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வருகின்றனர்.
இதில், தங்கள் இணையருடன் அளவு கடந்த அன்பை பரிமாறிக் கொள்வதற்கு மனிதர்கள் உதட்டு முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த “உதட்டு முத்தம்” பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதை கண்டறிய விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சியை நடத்தி வருகின்றனர்.
ஆராய்ச்சியின் இறுதியில் உதட்டு முத்தம் பிறந்து கிட்டத்தட்ட 2 கோடி ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மனித குரங்குகள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் இறுதியில் இந்த சுவாரஸ்யமான தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு 2 குரங்குகள் தங்கள் வாயை ஒன்றுடன் ஒன்று வைத்து அழுத்தியுள்ளன, இதையே விஞ்ஞானிகள் முத்தம் என்று தெரிவிக்கின்றனர்.

மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது அல்ல
உதட்டு முத்தம் என்பது மனிதர்களுக்கு உரியது மட்டுமல்ல, சிம்பன்சி, பேனோபோ குரங்குகள் போன்றவையும் முத்தமிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மனிதர்கள்(Homosapiens) வருவதற்கு முன்பே இருந்த நியாண்டர்தால்(Homo neanderthal) மனிதர்களும் ஒன்றுக்கொன்று முத்தமிட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |