சீனா - ரஷ்யா இடையிலான முதல் சாலைப் பாலம் இன்று திறப்பு!
சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான முதல் சாலைப் பாலம் இப்போது திறக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கும், போரில் உக்ரைனுக்கு உதவிவரும் மேற்கு நாடுகளுடனான மோதலுக்கு மத்தியில் ரஷ்யா, ஆசிய நட்பு நாடான சீனாவுக்கு இடையிலான முதல் சாலைப் பாலத்தை திறந்துள்ளது.
அமுர் ஆற்றின் (Amur River) மீது ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பாலம், கிழக்கு ரஷ்ய நகரமான பிளாகோவெஷ்சென்ஸ்க் (Blagoveshchensk) மற்றும் வடக்கு சீனாவில் உள்ள ஹெய்ஹேவுடன் (Heihe) இணைக்கிறது.
தீர்ந்தது சோவியத்-ரஷ்ய ரக ஆயுதங்கள்., நட்பு நாடுகளை மட்டுமே நம்பி இருக்கும் உக்ரைன்!
இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதன் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த பாலம் இரு நாடுகளுக்கும் திறந்துவைக்கப்பட்டது.
இன்று, Blagoveshchensk-ல் நடந்த விழாவின் போது, பாலம் சரக்கு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது, அப்போது அதில் பயணித்த முதல் லாரிகள் வானவேடிக்கைகளால் வரவேற்கப்பட்டன.
17 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்துடன் கடலில் மூழ்கிய 2 கப்பல்கள் கண்டுபிடிப்பு!
இரண்டு போக்குவரத்து பாதைகளைக் கொண்ட இந்த பாலம் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி சுமார் 19 பில்லியன் ரூபிள் ($328 மில்லியன்) செலவில் கட்டப்பட்டதாகும்.
4,250-கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம், 1980-களின் பிற்பகுதியில் இரு ராட்சதர்களுக்கு இடையேயான உறவுகளை இயல்பாக்கியதில் இருந்து செழித்தோங்கியது, ஆனால் போக்குவரத்து உள்கட்டமைப்பு பற்றாக்குறை இருந்து வந்தது. இப்போது தடைகள் அனைத்தும் இந்த பாலத்தால் தகர்க்கப்பட்டது.
பிரித்தானிய கைதி பயன்படுத்திய பழைய ரோலக்ஸ் வாட்ச் கோடிக்கணக்கில் ஏலம்!