17 பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்துடன் கடலில் மூழ்கிய 2 கப்பல்கள் கண்டுபிடிப்பு!
300 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய பிரபல சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே, இப்போது புதிதாக 2 கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இரண்டு கப்பல்களில் 17 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தங்கம் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1708-ல் ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்ட 62-Gun San Jose கப்பல், 2015-ல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் அதே கப்பலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய 2 கப்பல்கள் பற்றிய புதிய காட்சிகளை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ ரிமோட் கண்ட்ரோல் வாகனம் மூலம் படம்பிடிக்கப்பட்டது மற்றும் San Jose கப்பல் விபத்துக்கு அருகில் ஒரு படகு மற்றும் ஒரு ஸ்கூனர் ஆகியவற்றைக் காட்டுகிறது.
இரண்டு கப்பல்களும் 200 ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது. ரிமோட் மூலம் இயக்கப்படும் இயந்திரம் ஸ்பெயினின் கரீபியன் கடற்கரையிலிருந்து 3,100 அடி ஆழத்திற்கு அனுப்பப்பட்டு படம்படிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கடற்கன்னி போல் 42.2 கிலோமீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை படைத்த பெண்!
அந்த வீடியோ காட்சி, நீலம் மற்றும் பச்சை நிறத்தில், கடலின் அடிவாரத்தில் சிதறிக்கிடக்கின்ற தங்க நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் கோப்பைகளைக் காட்டுகின்றன.
பல நூற்றாண்டுகள் கடலுக்கு அடியில் கழித்த போதிலும், ஒரு கப்பலின் முன்பகுதி நன்கு பாதுகாக்கப்பட்டதாகக் காணப்படுகிறது. பல்வேறு வகையான களிமண் பானைகளைத் தவிர, ஒரு பீரங்கியும் கடற்பரப்பில் காணப்படுகிறது.
இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்!
கல்வெட்டுகளின் அடிப்படையில் தகடுகளின் தோற்றத்தை கண்டறிய கடற்படை மற்றும் அரசாங்கத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சான் ஜோஸ் கப்பல் விபத்து, கப்பல் விபத்துக்களின் புனித கிரெயில் என்று விவரிக்கப்பட்டது, ஏனெனில் இந்த கப்பல் கடலில் இதுவரை காணாமல் போன மிகப்பெரிய மதிப்புமிக்க பொருட்களில் ஒன்றாகும்.